சோதனை முறையில் மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை வரை ரயில்கள் இயக்கம்
சோதனை முறையில் மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை வரை ரயில்கள் இயக்கம்
சோதனை முறையில் மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை வரை ரயில்கள் இயக்கம்
ADDED : மே 31, 2010 07:44 PM
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை வரை நாளை முதல் சோதனை முறையில் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை வரை ரயில்கள் இயக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்று ரயில் நிர்வாகம் சோதனை முறையில் மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை வரை நாளை முதல் ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த சோதனை முறையிலான ரயில்கள் இயக்கம் ஒரு மாதம் வரை நீடிக்கும் என்றும், அதன் பின்னர் பொதுமக்களின் வரவேற்பை பொறுத்து ரயில்கள் இயக்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சோதனை முறையில் இயக்கப்படும் ரயில்கள் மேட்டுப்பாளையத்திலிருந்து 3 முறையும், கோவையிலிருந்து 3 முறையும் இயக்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.